
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் தனது 7-வது கட்ட பேச்சுவார்த்தயை தொடங்கியுள்ளது. இதனிடையே, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த நவம்பர் 26ந் தேதி முதல் உறைய வைக்கும் குளிருக்கு மத்தியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்தை நடத்தி வருகின்றது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
7-வது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்
எனவே இது குறித்து மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகளுடன், சுமார் 41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் தங்கள் 7-வது கட்ட (7-th round of Talks between farmers and Govt begins) பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடன் போராட்டம் இன்றுடன் 40-வது நாளை எட்டும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.
இதுவரை 60 விவசாயிகள் உயிரிழப்பு
இதனிடையே, குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டுள்ளதால், வயதான விவசாயிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும், இதற்கு மத்திய அரசு பதில் சொல்லவேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகம்!!
தமிழ்நாட்டில் வளர்ப்புக்கு தடைசெய்யப்பட ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்! குழிதோண்டி புதைத்த அதிகாரிகள்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!