Flipkart, Amazon போன்ற நிறுவனங்கள் பண்டிகைக் காலங்களில் 80 முதல் 85 சதவீதம் வரை தள்ளுபடி தருவது வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் இம்முறையும் அதிரடி ஆஃபர்கள் வெளியாகி வரும் வண்ணம் உள்ளன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கில், இந்தியாவில் முக்கியமாக இரண்டு தளங்கள் அதிகம் பயன்பட்டில் இருக்கின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்.. இரண்டுமே இந்திய இ-காமர்ஸ் துறையின் முக்கிய பிரமுகராக இருக்கின்றன. இவை இரண்டும் தற்போது பெரும் தள்ளுபடி சலுகை விற்பனைகளைக் கொண்டு வரும்வண்ணம் இருக்கின்றன. அமேசானில், இந்த விற்பனை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Flipkart: சலுகை விற்பனைகள்
Flipkart நிறுவனம் தனது விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 80% வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. தொலைக்காட்சிகள் போன்ற உபகரணங்களுக்கு 80% வரை தள்ளுபடியும் உள்ளது. இது தவிர, ஃபேஷன், அழகு, பொம்மை, விளையாட்டு மற்றும் பிற பொருட்களுக்கு 60%-80% தள்ளுபடி வழங்கப்படுகிறது. Flipkart-ல் உணவு, குளிர் பானங்கள் மற்றும் கிச்சன்-டைனிங்க் ஆகியவற்றுக்கும் கதவு மெத்தைகளுக்கும் என ஒவ்வொன்றிற்கும் 85% வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.
Amazon சலுகை விற்பனைகள்
ஃபிளிப்கார்ட்டைப் போன்றே அமேசானும் 2,000க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை சலுகை விற்பனையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் போது அமேசான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடியும், டிவி மற்றும் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடியும் உள்ளது. அதே போல, ஃபேஷன், வீடு, சமையலறை மற்றும் பிற பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
விற்பனையாளர்களுக்கான பங்கு
சலுகை விற்பனை மூல விற்பனையை அதிகரிப்பதற்காக, தளங்கள் அவற்றின் கமிஷனைக் குறைக்கின்றன. இதனால், இருப்பில் உள்ள சரக்குகளை விற்று தீர்க்க முடிகிறது. மேலும் நிறுவனத்திடமிருந்து அதிக அளவிலான சரக்குகளை வாங்கி பின்னர் அதை ஆன்லைனில் விற்பனைக்கு வைப்பதால் இலாபம் அதிகமடைகிறது. இது தவிர, லாபம் = விற்பனை விலை - செலவு விலை என்பது தான் வியாபாரத்தின் முக்கிய சூத்திரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எத்தகைய பொருளையும் அதிக அளவில் விற்றால், அதன் விலை குறைவதுடன், வருமானம் அதிகரிக்கும் அதிக விற்பனையில், இலாப சதவிகிதம் குறைவாக இருந்தாலும், அளவு அதிகரிப்பதால், வருவாய் அதிகரிக்கிறது.
எனவே, மொபைல், டிவி, லேப்டாப், ஏசி முதலான பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்வதால் மட்டுமே இவ்வளவு பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இது தவிர, மொத்தமாக விற்பனை செய்யப்படுவதால், நிறுவனம் மற்றும் விற்பனையாளரின் லாபம் அதிகரிப்பதால் இவை அதிக தள்ளுபடிகளை அறிவிக்கின்றன.
மேலும் படிக்க
இன்றைய வேளாண் சார்ந்த முக்கிய தகவல்களும் நடைமுறைகளும்!
PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!