இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றை மையப்படுத்தி பல்வேறு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் ஆழ்துளை கிணறு அமைப்பது அடிப்படை தேவையாக அமைந்துவிட்டது. தண்ணீரின் தேவை அதிகரித்து இருப்பதால் கட்டடங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் ( ஆழ்துணை கிணறு ) போர்வெல் மூலம் போர் அமைத்து அதன் மூலம் தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்கின்றனர் பொதுமக்கள்.
அதிக பணம் செலவில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பொழுது அதில் தோல்வியும் கிடைப்பது உண்டு. ஆழ்துளை அமைக்கும்பொழுது ஓரிடத்தை தேர்வு செய்து அதில் போர் போடும் பொழுது பல நூறு அடியை கடந்த பின்னரும் கூட தண்ணீர் கிடைக்காமல் போர் தோல்வியில் முடிவதுண்டு. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்படும்.
இதன் காரணமாக போர் போடுவதற்கு முன்பாக எந்த இடத்தில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றது போல் ஆழ்துளை கிணற்றை அமைப்பர். அதற்கு பாரம்பரிய முறைப்படி தேங்காய், வேப்பங்குச்சி ஆகியவற்றைகளைக் கொண்டும் நிலவியல் வல்லுநர்கள் மூலம் நவீன இயந்திரங்களைக் கொண்டும் நீரோட்டம் பார்ப்பது வழக்கம்.
கட்டுமான பணிகளில் நீரோட்டம் பார்ப்பது ஒரு முக்கிய நிகழ்வாகவே உள்ளது இதற்காக உள்ளூரில் நீரோட்டம் பார்க்கும் நபர்களை அழைத்து நீரோட்டம் பார்த்த பிறகு தான் ஆழ்துளை கிணறு அமைக்க முன் வருகின்றனர்.
மேலும் படிக்க: