தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாதந்தோறும் 2ம் மற்றும் 4ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 22ம் தேதியன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு பல்வேறு பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546 – 254510 அல்லது 6379268661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
மேலும் படிக்க