1. செய்திகள்

‘மங்கி பாக்ஸ்’ தொற்றின் அறிகுறிகள் என்ன ? எச்சரிக்கை தேவை

T. Vigneshwaran
T. Vigneshwaran
Monkey pox infection

மங்கி பாக்ஸ் என்பது ஒரு அரிய வகை வைரஸ் ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும். கொரோனா தொற்றின் விளைவுகளிலிருந்தே மக்கள் மீளாத நிலையில்,மங்கி பாக்ஸ் நோய் தீவிரமாக பரவிவருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்கி பாக்ஸ் ஃஓயின் அறிகுறிகள் தானாகவே ஒரு சில வாரங்களில் மறைந்துவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தாலும், இந்நோயால் தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், நிமோனியா, குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் முன்னர் மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 1% முதல் 10% பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்றாலும் யாருக்கெல்லாம் அதிக ஆபத்து? மங்கி பாக்ஸ் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் வைரஸிலிருந்து பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை என்ன என்பதை பார்க்கலாம். எலி, அணில், குரங்குகள் போன்ற விலங்குகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் அதிகமுள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மங்கி பாக்ஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக 6-13 நாட்களில் தோன்றும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் இதன் அறிகுறிகள் வெளிப்பட மூன்று வாரங்கள் கூட ஆகலாம் மற்றும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு 5 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, ஒற்றை தலைவலி, தசை வலி, முதுகு வலி, வீங்கிய சுரப்பிகள், குளிரால் நடுக்கம், சோர்வு ஆகியவை சில பிரதான அறிகுறிகள் ஆகும்.

மேலும் படிக்க

இந்தியாவில் இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இயங்காது!! ஏன் தெரியுமா?

English Summary: What are the symptoms of 'Monkey Pox' infection? Caution is required Published on: 18 July 2022, 08:09 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.