நெல்லை மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் தனி நடைபாதை அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும், முதல்வரின் அனுமதி உடன் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் தனி நடைபாதை அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும், முதல்வரின் அனுமதி உடன் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் இணைந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தின் சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு மற்றும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் ஏ. வ. வேலு முதலானோர் தலைமையில் நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ. வ. வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரை நடைபெறும் சாலை பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் ஒப்பந்ததாரர் அழைத்துப் பணிகள் குறித்து பேசி விரைந்து நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ் ஆகியோரின் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் முதலானோரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வரை நடைபெறும் சாலை பணிகளும் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு வரும் எனக் கூறி இருக்கிறார். தொடர்ந்து தகவல் தெரிவித்த அவர் கூறுகையில், சென்னை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை 2005 ஆம் ஆண்டில் நிலை எடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு, மாநில நெடுஞ்சலைகள் தரமானதாக அமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தனி பாதை அமைக்க பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தமிழகத்தில் கோடை வெயில்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மீனவர்களுக்கு வர இருக்கும் பயோமெற்றிக் பதிவு-இனி எந்த பயமும் இல்லை!