News

Wednesday, 23 November 2022 01:50 PM , by: Poonguzhali R

Aavin: Here comes Aavin's cake! New information!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்குவதையொட்டி, ஆவின் நிர்வாகம் கேக் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

தமிழக மக்களிடையே ஆவின் தயாரிப்பு நிர்வாகம் பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது . அன்றாடம் பொதுமக்கள், பால், நெய் என பலவிதமாகப் பால் பொருட்களை ஆவின் நிர்வாகத்தில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இப்படி பல வாடிக்கையாளர்களை கொண்ட ஆவின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே புதுப்புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு வகைகள் செய்து புது செயலைச் செயல்படுத்தி இருந்தது.

அந்த வகையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கும் அறிமுகமாகிறதாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் பிளேவர்களிலும் கேக் அறிமுகமாகிறது என்பதும் கூடுதல் தகவல்.

இந்த கேக்குகளை நடப்பு மாதமே அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்றும் ஆவின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இனி ஆவின் கேக் என விற்பனைக்கு கேக்குகள் வர இருக்கின்றன. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000!

4 மாவட்டங்களுக்கு கனமழை- வானிலை அலெர்ட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)