மதுரை ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து பணி நியமனம் பெற்ற 47 பேருடைய பணி நியமனத்தை ரத்து செய்து பால்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு இருப்பதாக வெளியான தகவளை அடுத்து சுமார் 236 பணி நியமன உத்தரவுகள் ரத்தாக உள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பணி நியமனம் பெற்ற 47 பேருடைய பணி நியமனத்தை ரத்து செய்வதாகப் பால்வளத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுரை ஆவினில் கடந்த 2020 மற்றும் 2021ல் மேலாளர், எக்ஸிகியூடிவ் ஆகியவை உள்ளிட்ட 61 பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டன. அப்பொழுது இந்த நியமனத்தில் தகுதியற்றவர்க்குக்கு பணி வழங்கியதாகவும், எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்னதாக வெளியானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு, காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தினைச் சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை ஆவினில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Aavin: ஆவின் பச்சைப்பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு!
PMEGP: 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம்!