பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 16 September, 2022 1:40 PM IST
Aavin Products are on the rise from today!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்றுமுதல் (16/09/2022) உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளின் இனிப்புப் பொருட்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

பொதுத்துறை கூட்டுறவு நிறுவனம் ஆவின் தனது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த விலை உயர்வுக்குத் தமிழகப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசு பால் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. விதித்ததை அடுத்துக் கடந்த ஜூலை மாதத்தில் தயிர் மற்று நெய் ஆகியவற்றின் விலையினை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இன்று இனிப்புப் பொருட்களின் விலையினை உயர்த்துவதாகக் கூறியுள்ளது.

விலை உயர்வு பட்டியல்

  • 125 கிராம் குலாப் ஜாமுன்: ரூ. 45-லிருந்து ரூ. 50 ஆக உயர்வு
  • 250 கிராம் குலாப் ஜாமுன்: ரூ. 80-லிருந்து ரூ. 100 ஆக உயர்வு
  • 100 கிராம் ரசகுல்லா: ரூ. 40-லிருந்து ரூ. 45 ஆக உயர்வு
  • 200 கிராம் ரசகுல்லா: ரூ. 80-லிருந்து ரூ. 90 ஆக உயர்வு
  • 100 கிராம் பால்கோவா: ரூ. 47-லிருந்து ரூ. 55 ஆக உயர்வு
  • 250 கிராம் பால்கோவா: ரூ. 120-லிருந்து ரூ. 140 ஆக உயர்வு

மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!

இந்த விலை உயர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு விற்பனை விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஆவின் பொருட்களும், ஆவின் பாலும் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகப் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க

இரட்டிப்பு லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை!

அடடே! அத்திப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

English Summary: Aavin Products are on the rise from today!
Published on: 16 September 2022, 01:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now