ஆவின் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதால் அவற்றினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால், வெண்ணெய், நெய், பன்னீர் உட்பட 200 வகையான பால் உபப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிலும் விற்கப்படுகின்றன.
தனியார் பால் விலை உயர்வால், ஆவின் வழங்கக்கூடிய பால் விற்பனை அதிகரித்து உள்ளது. பாலை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து குறைந்த் அவிலைக்கு விற்பதால் ஆவின் நிறுவந்த்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இதனைச் சமாளிக்க புதிய பால் பாக்கெட் விற்பனையினை ஆவின் நிறுவனம் துவக்கியுள்ளது.
இந்த நிலையில் ஆவின் உபப் பொருட்கள் விற்பனை கணிசமாகக் குறைந்துக் கொண்டு வருகின்றது. ஆவின் பொருட்கள் வீணாவதால் நிறுவனத்தின் நஷ்டமானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து ஆவின் விற்பனையாளரிடன் கேட்கும்பொழுது, பணப்பரிமாற்ற அமைப்புகள் வசூலிக்கும் சேவை கட்டணத்தைவிட, ஆவின் பொருட்கள் விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைவு. இது மட்டுமின்றி, பொருட்களை வாங்கியதும் தனியார் நிறுவனங்களைப் போல, பணத்தைச் செலுத்த அவகாசம் வழங்காமல் உடனே பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆவின் பாலைத் தவிர, மற்ற உபப் பொருட்களை வாங்க பாலகம் நடத்துவோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதுவே விற்பனை குறைய காரணம் எனக் கூறுகின்றனர். இந்நிலையினைப் போக்க அதிகாரிகளுக்கு உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு ஆவின் பாலகத்திற்கும் வாரத்திர்கு இரண்டு முறை 5,000 நூபாய்க்கு மேல் பொருட்களைக் கொள்முதல் செய்ய வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க
இனி ரேஷன் கடையிலேயே சிலிண்டர் வாங்கலாம்: அரசின் புதிய அறிவிப்பு!