நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 June, 2022 10:24 AM IST
Accumulated Admissions in Government Schools!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி முதலிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றிய தலைவர்களிடம் நேரில் சென்று கேட்டறிந்து ஆய்வினை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

இதைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்; திருச்சி மாவட்டத்தில் உள்ள 54 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 வகுப்பில் 13 பள்ளிகளில் 100% மாணவ-மாணவியர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்றார்.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!

 

மேலும் அரசு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை குறித்துப் பேசிய அவர், இதுவரை அரசு பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார். கடந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை சுமார் 6 லட்சம் என இருந்தது. இந்த வருடம் அந்த இலக்கை அடையும் சூழல் உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு எல்லாம் காரணம் நாம் பல திட்டங்களை கொண்டு வருகிறோம். அது 7.5 சதவீத இடஒதுக்கீடாக இருந்தாலும் சரி, காலை சிற்றுண்டி வழங்குவதாக இருந்தாலும் சரி, அதேபோல் மாணவர்களை மேம்படுத்தும் விதமாக  மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்திருப்பதுதான் இது போன்ற சேர்க்கையின் அளவு அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: 10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!

அதோடு, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமையானது கொடுக்கப்பட்டு வருகின்றதும் ஒரு காரணம் ஆகும். இதே போன்று உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அவை கொடுத்தால் அரசு பள்ளிகளை முதலில் தேடி வருவார்கள் என்பதை அறிந்துதான் தமிழக அரசு கல்வித்துறையில் பல திட்டங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: மலிவான விலையில் 5G ஐபோன்! இன்றே வாங்குங்க!!

மேலும் அவர் பேசுகையில், “மதுரையில் எண்ணும் எழுத்தும் என்ற ஒரு திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறேன். இதன் மதிப்பு 2025-ல் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு அடிப்படையாக தமிழாக இருந்தாலும், ஆங்கிலம் இருந்தாலும், எழுதவும் படிக்கவும் அடிப்படை கணக்குகளை அவர்கள் தெரிந்து கொள்வதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தமிழகம் அடையும்.

தமிழகம் முழுவதும் உள்ள பழமை உடைய, இடியும் தன்மை உள்ள பள்ளிகளின் கட்டிடங்களில் அமர்ந்து குழந்தைகள் படிக்கக் கூடாது எனக் கூறி இருக்கிறோம். பழமை வாய்ந்த பள்ளிக்கூடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் நிதிகள் ஒதுக்கி, வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

மேலும் படிக்க: அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது எப்படி? இன்றே தொடங்குங்கள்!

இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். மற்ற துறைகளுக்கு கட்டிடம் கட்டுவதை விடவும் எங்களது கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். நிதிகள் ஒதுக்கீடு செய்ய, செய்ய எந்தெந்த பள்ளிகளுக்கு தேவையோ அந்தந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் இதுகுறித்து பேசி பொது நிதியாக இருந்தாலும் சரி, அதனை கொண்டு எங்கெங்கெல்லாம் உடனடியாக கட்டடங்கள் கட்ட வேண்டுமோ, எங்கெல்லாம் கழிவறை தேவையோ அதற்கு செவிசாய்த்து கட்டி தருவதற்கான கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க

பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!

ICICI வங்கியின் வட்டி உயர்வு! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

English Summary: Accumulated Admissions in Government Schools! You Know Why?
Published on: 24 June 2022, 10:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now