ரேஷன் கடைகளில் (Ration Shops) பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் வேலைகளை குறைக்கும் நோக்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர பாதுகாப்புத் துறை ஆணையர் முக்கிய உத்தரவை அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை எப்போதும் அறிவித்து வருகிறது. அவற்றின் வரிசையில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய உத்தரவை வாழ்நகியுள்ளார்.
அதில், 'பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் தற்போது வேலை செய்யும் ரேஷன் கடைகளில் ஒரு உதவியாளரையோ அல்லது கட்டுனரையோ நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாற்றுத்திறனாளி பணியாளர்களை இருநபர் பணிபுரிய தகுதியுள்ள கடைகளில் மட்டுமே பணியமர்த்தப்பட்டவேண்டும். ஒருநபர் மட்டுமே பணிபுரிய தகுதியுள்ள ரேஷன் கடைகளில் அவர்களை பணியமர்த்துதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் பெண்கள் பணியமர்த்தப்படும் போது அவர்கள் ஆண் பணியாளர்களுக்கு இணையாக பணியமர்த்தப்படலாம். ஆனால் அவர்கள் பணியமர்த்தப்படும் ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி இருப்பது அவசியம்.
ரேஷனில் பெண்கள் பணியமர்த்தப்படும் போது மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்' என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
இந்த உத்தரவின் கீழ், பணி நியமினங்களுக்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கூட்டுறவுத் துறையின் கீ்ழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், எடையாளர்களாக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஒருவரே இரண்டு, மூன்று கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு அதிக பணிச்சுமைக்கு வழி வகுக்கிறது.
இந்த நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் அடிப்படையில் ரேஷன் கடையில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பணிச்சுமை குறையும் என்பதுடன், புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: