1. மற்றவை

Ration card: புதிய ரேசன் கார்டுகள்?விரைவில்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
New ration cards

ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க உயர் மதுரை நீடுதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு
  • அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் , 4,000 ரூபாயையும், 14 பொருட்களும்
  • ரேசன் கார்டு இல்லாத காரணத்தால் இந்த நிவாரணத்தை பெற இயலவில்லை

தமிழகத்தில் ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேசன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க பழங்குடியின நலத்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்றதில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 1.5 சதவிகிதம் மக்கள் பழங்குடியினர் இருக்கின்றன. தமிழகத்தில் 36 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியின இனங்கள் வாழ்கின்றன. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பழங்குடியின மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழக அரசு கொரோனா நிவாரண தொகையாக, 4 ஆயிரம் ரூபாயையும், 14 முக்கிய சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்க கூறியது. ஆனால், பழங்குடி இனத்தை சேர்ந்த பல மக்கள் ரேசன் கார்டு இல்லாத காரணத்தால் இந்த வசதிகளை பெற முடியவில்லை. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு கிடைப்பதை, குறிப்பாக ஏழை மக்கள் உணவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது.

ஆனால், பழங்குடியின மக்கள் பலர் ரேசன் கார்டு இல்லாததால் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன் பெற வில்லை. எனவே, பழங்குடியினர் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு ரேசன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு, “மனுதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் புதிதாக மனு அளிக்கவும், அதன்படி, முறையாக ஆய்வு செய்து ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு, ரேசன் கார்டுகளை வழங்க தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் பிடிக்க:

Ration card: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றமா?

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

English Summary: Ration card: New ration cards? Coming soon! Published on: 24 August 2021, 04:34 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.