தமிழகத்தில், இரவு ஊரடங்கு உத்தரவின் போது எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கூடுதல் பேருந்துகள் :
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பகலில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, சென்னை போன்ற தொலைதூர இடங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற பேருந்துகளில் பயணிகளின் நெரிசல் வழக்கத்தை விட சற்றே குறைவாக காணப்படுகிறதுய. கொரோனா தொற்று முழுவதுமாக தீரும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சூழலில் பகல் நேரங்களில் அதிகபட்ச பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் நேற்று 16,284 பேருந்துகள், 345 விரைவுப்பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் 2,790 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அரசு பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும் படிக்க...
7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேப் பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு!
நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் ஓடாது! பொதுமக்களுக்கு அதிர்ச்சி!
விவசாயத்திற்கு தனி பட்ஜெட்: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் வெளியீடு