1. செய்திகள்

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் வெளியீடு

KJ Staff
KJ Staff
Seperate Budjet

Credit : Daily Thandhi

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று பா.ஜ., (BJP) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்.6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., இன்று 'தொலை நோக்கு பத்திரம்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதில் மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கை விபரம்:

 • அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் (Separate budjet) போடப்படும்.
 • விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு (Fisher) வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.
 • தமிழக மேல்சபை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மேலும் 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும்.
 • 5 ஆண்டுக்கு ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்படும். தேவையான மணல் இறக்குமதி (Import) செய்யப்படும்.
 • 18 முதல் 23 வயது வரையிலான மகளிருக்கு இரு சக்கர வாகன இலவச ஓட்டுனர் உரிமம் (Free Driving license) வழங்கப்படும்.
 • இந்து கோவில்களின் நிர்வாகம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
 • பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலிட மக்களிடமே வழங்கப்படும்.
 • பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
 • மின்னணு குடும்ப அட்டை தாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேடியாக வழங்கப்படும்.
 • முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு (Free bus pass) சலுகை வழங்கப்படும்.
 • விதவைகள் நலவாரியம் அமைக்கப்படும். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்
 • பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர்.
 • தாய் மொழியில் மருத்துவக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.
 • ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
 • பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் கோவில் ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர்.
 • இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.
 • உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தேர்தல் துறை சோதனையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி! வீணாணது நெல் மூட்டைகள்

பந்தல் அமைக்காமல் தரையில் புடலை சாகுபடி! அசத்தும் விவசாயிகள்!

English Summary: Separate budget for agriculture: BJP Release of the election statement

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.