கல்வராயன் மலையில், ஜஹாங்கிரில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் (Tourists) வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வராயன் மலையில் (Calvary Hill) பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற பல்வேறு நீர் வீழ்ச்சிகள் (Water falls) உள்ளன. மேலும் கரியாலுார் சிறுவர் பூங்கா, படகுத்துறை மற்றும் மூங்கில் குடில்கள் (Bamboo huts), கருமந்துறை அரசுப் பழ பண்ணை போன்றஇடங்களும் உள்ளன. இதனைக் காண கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை போன்ற வெளிமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கல்வராயன் மலைக்கு வந்து செல்கின்றனர்.
தினசரி மழையால் நீர்வரத்து அதிகரிப்பு:
கல்வராயன் மலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கன மழை (Heavy rain) பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தினசரி பெய்து வரும் மழையால், கல்வராயன் மலை முழவதும் பச்சை பசேல் (Green mosaic) என, செழிப்பாக காட்சியளிக்கிறது. இங்கு நல்ல சீதோஷ்ண நிலையும் நிலவுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் (Corona Lockdown) பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், தங்கள் குடும்பத்துடன் கல்வராயன் மலைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தனது நண்பர்கள் பட்டாளத்துடன் வந்து அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
கொரோனா ஊரடங்கில், வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள், தற்போது கல்வராயன் மலைக்கு வந்து, இயற்கையை ரசித்து, அருவிகளில் குளித்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெரியார் நீர்வீழ்ச்சி:
பெரியார் நீர் வீழ்ச்சி (Periyar water fall) மட்டுமே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எளிதில் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. மற்ற நீர் வீழ்ச்சிகளுக்கு செல்ல வனப்பகுதிகளில், கரடு முரடான பாதையில் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரியார் நீர் வீழ்ச்சி மற்றும் கரியாலுார் படகுத்துறை போன்ற இடங்களுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொரோனாத் தொற்று காரணமாக தற்போது, பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் (Forest officers) தடை விதித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை:
கல்வராயன் மலைக்கு சுற்றுலா வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பெரியார் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் இளைஞர்கள் மேகம், கவியம் போன்று வனப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு படையெடுத்து, குளித்து மகிழ்கின்றனர். வனப் பகுதியில் உள்ள அருவிகளுக்கு செல்ல முடியாத சுற்றுலாப் பயணிகள், பெரியார் அருவி மற்றும் கரியாலுார் படகுத்துறை ஆகியவற்றிற்கு, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் மேகம், கவியம், சிறுகலுார் போன்ற அருவிகளுக்கு பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை (Request) விடுத்து வருகின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்.
மேலும் படிக்க...
வன விலங்குகளைப் பாதுகாக்க, வன உயிரின பாதுகாப்பு வாரம்!
திருச்சியில் அரைவட்ட சுற்றுச்சாலை பணிக்காக ஏரிகள் அழிப்பு!
கோட்டாட்சியர் ஆய்வு!