1. செய்திகள்

வன விலங்குகளைப் பாதுகாக்க, வன உயிரின பாதுகாப்பு வாரம்!

KJ Staff
KJ Staff

இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும். காடுகளை வாழ்வாதாரமாக கொண்டு பல்லாயிரக்கணக்கான விலங்கினங்கள் (Animals) வாழ்கின்றன. மனிதர்களின் பேராசை, பெருகி வரும் மக்கள் தொகை (Population), அறிவியல் வளர்ச்சியால் விலங்குகள் அழிந்து வருகின்றன. அதனால் ஏற்படும் பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்கத் துவங்கியுள்ளனர். எனவே, விலங்குகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்டோபர் 2 முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரினங்கள் பாதுகாப்பு வாரம் (Wildlife Conservation Week) கடைபிடிக்கப்பட்டு முடிவடைந்தது.

விலங்குகளுக்கு அச்சுறுத்தல்:

இந்தியாவில் வன விலங்குகளுக்காக 44 தேசிய பூங்கா (National Park), 247 வன விலங்கு சரணாலயங்கள் (Wildlife Sanctuaries) உள்ளன. வனப் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், காலநிலை மாற்றம் (Climate Change), வேட்டையாடுதல் (Hunting), வறட்சி (Drought), பிளாஸ்டிக் பயன்பாடு (Plastic Usage), ஆக்கிரமிப்பு (Aggression) போன்றவற்றால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. காடுகளில் மரம் வெட்டுதல், சுற்றுலாத் தலமாக மாற்றுவது, சாலைகள் அமைத்தல் போன்றவற்றால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விலங்குகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பதால் அவை, பாதை மறந்து கிராமங்களுக்கு புகுந்து விடுகின்றன.

திண்டுக்கல்லில் வன விலங்குகள்:

திண்டுக்கல் மாவட்டம், மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ளது. இம்மாவட்டம் செழிப்பாக இருக்க அவையும் ஒரு காரணமே. மொத்தம் 80,000 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டங்களில் அரிய விலங்குகள், பறவைகள், மூலிகைகள், மரங்கள் மற்றும் பூச்சியினங்கள் உள்ளன. ஒரு வனம் ஆரோக்கியமாக இருப்பது, அங்கு உயிரினங்களின் பெருக்கத்தைப் (Multiplication of organisms) பொறுத்து உள்ளது. இதற்காகவே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், திண்டுக்கல் (Dindigul) வன கோட்டத்தில் அழகர் கோயில், சிறுமலை, கன்னிவாடி, அய்யலுார், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி, நத்தத்தில் குரங்குகள் - 500, யானைகள் - 120, மயில்கள் - 150, கடமான்கள் - 140, தேவாங்குகள் - 7, காட்டுமாடுகள் - 450, காட்டு முயல்கள் - 50, காட்டுப் பூனைகள் - 20, கீரிகள் - 10, செந்நாய்கள் - 15, முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, நரி தலா - 10, உடும்பு - 10, கரடி - 10, சாம்பல் நிற அணில், மான் என மொத்தம் 2175 உயிரினங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 2019 கணக்கெடுப்பின் படி கொடைக்கானலில் 16 புலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தாண்டு கணக்கெடுப்பு நடத்தும்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

Image Credit : Vinavu

விலங்குகள் - மனிதர்கள் மோதல்:

வனவிலங்குகள் வறட்சி மற்றும் கோடையில் உணவு கிடைக்காவிடில், ஊருக்குள் புகுந்து விளை பொருட்களை உண்டு பசியாறுகின்றன. இதனால் சில நேரங்களில் மனிதர்கள் விலங்குகளிடையே மோதல் (Conflict) ஏற்படுகிறது. தன்னுயிரைக் காக்க போராடும் விலங்குகளால், மனித உயிர்கள் பறிபோவது அரங்கேறுகிறது. இதற்கு மனிதர்களே காரணம். காடுகள் செழிப்பில் (Forests thrive) விலங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வன விலங்குகளை பாதுகாக்க, மனிதர்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. அதன் அழிவுக்கு துணை போகாமல் இருந்தாலே போதும். இன்று முதல் காடுகளை, வன உயிரினங்களை பாதுகாக்க உறுதியெடுப்போம்.

விலங்குகளைப் பாதுகாப்போம்:

திண்டுக்கல், கொடைக்கானலில் விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க 48 வேட்டைத் தடுப்பு காவலர்கள் (Anti-hunting guards) உள்ளனர். கோடை காலத்தில் விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய, தண்ணீர்த் தொட்டிகள் (Water Tanks) அமைக்கப்பட்டுள்ளது. வனத்தைப் பாதுகாக்க, அன்னிய மரங்களை களையெடுக்கும் பணி நடக்கிறது. வனப் பரப்பை (Forest area) அதிகரிக்க அரிய வகை மரங்கள் நடப்பட்டுள்ளது. காடுகள் இல்லையென்றால் மனித குலமே இல்லை என்று சொல்லலாம். காடுகள் என்பது அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்து தான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection), காடுகளை பாதுகாப்பதில் தான் இருக்கிறது. காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு (Awareness) ஏற்படுத்தி வருகிறோம். வனம் வளர்ந்தால் தான் மனித இனம் வாழும். வன உயிரின பாதுகாப்பு வாரம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இனி மரங்களை வெட்டவோ, வன விலங்குகளை யாரும் துன்புறுத்தவோ, மாட்டோம் என தனக்குத் தானே உறுதியேற்று, வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும்.

வனச்சட்டங்கள்:

யானைகள் பாதுகாப்பு (1873)
காடுகள் பாதுகாப்பு (1927)
வங்காள காண்டாமிருக பாதுகாப்பு (1927)
வன பறவைகள் பாதுகாப்பு (1951)
மரங்கள் பாதுகாப்பு (1955)
பிராணிகள் வதை தடுப்பு (1960)
வன விலங்குகள் பாதுகாப்பு (1972)
காடுகள் பாதுகாப்பு (1980)
இயற்கை சூழல் பாதுகாப்பு (1994)
பல்லுயிர் பெருக்கம் (2002)

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

பெரியாறு அணையிலிருந்து அக்டோபர் 7 முதல் தண்ணீர் திறப்பு! முதல்வர் பழனிசாமி உத்தரவு!


வாழையில், வாடல் நோயைக் கட்டுப்படுத்தி, விளைச்சலை அதிகரிப்பது எப்படி?


சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடை சந்தையை, மீண்டும் துவக்க கோரிக்கை!

English Summary: To protect wildlife, Wildlife Conservation Week!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.