அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு சமீபத்தில் முப்படை வீரர்களை தேர்வு செய்யும் முறையில் அக்னிபாத் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு இந்தியளவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் ஒன்றிய அரசு இந்த திட்டத்தின் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் ஆகியவற்றில் தேர்வாகும் வீரர்களுக்கு 4 ஆண்டுகால பணி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 31.03.2023 ஆம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் (https://careerindianairforce.cdac.in ) மற்றும் (https://agnipathvayu.cdac.in ) என்கிற இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிப்புரிய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 26,2002 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜுன் 26,2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
17.5 ஆண்டுகள் முதல் 21 வயது வரை
உடல் தகுதி:
ஆண்கள் 152.5 சென்டி மீட்டர் உயரம், பெண்கள் 152-சென்டி மீட்டர் உயரம்
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு
- உடல் தகுதிதேர்வு,
- மருத்துவபரிசோதனை
இணையவழி தேர்வு: 20.05.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023 (ஆன்லைனில்)
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் 10 +2 இடைநிலை மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் அல்லது டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் / இன்ஸ்ட்ரூமெனடேஷன் டெக்னாலஜி/இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்தும் தொழிற் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ஆங்கிலப் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தொழில்சார்ந்த பாடம் அல்லாத இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 2 ஆண்டு தொழில் படிப்பு பயின்றவராக இருக்க வேண்டும்.
மேலும் காண்க:
நீல ஆதார் பெறுவது எப்படி? அதனால் என்ன பயன்?
இனி Google Pay, Paytm மூலமா பணம் அனுப்புனா Extra காசு பிடிப்பாங்களா? உண்மை என்ன..