நீல ஆதார் பெறுவது எப்படி? அதனால் என்ன பயன்?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
How to get Baal Aadhaar or Blue Aadhaar

பால் ஆதார் அல்லது நீல ஆதார் என்பது (0-5) வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் UIDAI-யால் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது நீல நிற ஆதார் அட்டை அதன் செல்லுபடியை இழக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில், பல்வேறு நலத் திட்டங்களில் அரசாங்கம் சார்பில் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் இதர பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமான KYC ஆவணங்களில் ஒன்றாகும். முழுப்பெயர், நிரந்தர முகவரி மற்றும் பிறந்த தேதி உட்பட பயனாளர்கள் பற்றிய முக்கிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதாலும், இவை அனைத்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட சிறப்பு 12 இலக்க எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அரசின் சார்பில் முக்கியமான அடையாளச் சான்று ஆவணமாகக் கருதப்படுகிறது.

பால் ஆதார் என்றும் அழைக்கப்படும் நீல ஆதார், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்டது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு (0-5) இந்த நீல ஆதார் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது நீல நிற ஆதார் அட்டை அதன் செல்லுபடியை இழக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆதார் கார்டுடன் ஒப்பிடுகையில் நீல ஆதார் ஒரு விஷயத்தில் மட்டுமே வேறுபடுகிறது. நீல ஆதாரில் குழந்தையின் பயோமெட்ரிக் தகவலை கொடுக்க தேவையில்லை. குழந்தை ஐந்து வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல் (கைரேகைகள் மற்றும் இரண்டு கருவிழிகள்) புதுப்பிக்கப்படும்.

மார்ச் 31, 2022 நிலவரப்படி 0-5 வயதுக்குட்பட்ட 2.64 கோடி குழந்தைகள் பால் ஆதார் பெற்றிருந்த நிலையில், ஜூலை 2022 இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 3.43 கோடியாக அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீல ஆதார் பெறுவதற்கான வழிமுறைகள்:

  • உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆதார் பதிவு மையத்தை அணுகவும் இல்லை அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களை அணுகலாம்.
  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாளச் சான்று மற்றும் ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.
  • குழந்தையின் ஆதார் இணைக்கப்பட உள்ள பெற்றோரின் ஆதார் எண், அவர்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் உட்பட மற்ற விபரங்களை உள்ளடக்கிய  விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் குழந்தைக்கான நீல ஆதாருக்கு விண்ணபித்தமைக்கு சான்றாக ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதன் மூலம் நீங்களாகவே ஆதார் விண்ணப்பத்தின் நிலையை இணையத்தில் அறிந்துக் கொள்ளலாம்.

ஆவணங்களைச் சரிபார்த்த 60 நாட்களுக்குள் குழந்தையின் பெயரில் ஒரு நீல ஆதார் UIDAI-யால் வழங்கப்படும். 5 வயதுக்கு பின் ஆதாரை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.

மேலும் காண்க:

இனி Google Pay, Paytm மூலமா பணம் அனுப்புனா Extra காசு பிடிப்பாங்களா? உண்மை என்ன..

English Summary: How to get Baal Aadhaar or Blue Aadhaar Published on: 29 March 2023, 04:34 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.