தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) சார்பில் 5 நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (Export And Import) பயிற்சி, உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கும் வழங்கப்படுகிறது.
இதில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
பயிற்சி முகாம் (Training Camp)
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் நவம்பர் 23 முதல் 27, 2020 வரை வழங்கப்படுகிறது.
கட்டணம் (Fees)
பயிற்சிக் கட்டணமாக நபருக்கு ரூபாய் 10,000 + ரூ.1800 ஜிஎஸ்டி (18%) = ரூபாய் 1,800/- வசூலிக்கப்படுகிறது.
பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளன. அதாவது 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள busieness@tnau.ac.in, eximabdtnau@ gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண் 0422 6611310. கைப்பேசி எண் 95004 76626 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!