News

Wednesday, 26 February 2025 02:30 PM , by: Muthukrishnan Murugan

Terrace gardening (pic credit : Pexels)

பொதுவாக முதன் முதலில் மாடித் தோட்டம் வைப்பவர்கள் எடுத்தவுடன் காய்கறி சாகுபடியில் இறங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி பூச்சி, நோய் தாக்குதல் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்தும் பல சந்தேகங்கள் இருக்கும் .

இவற்றிக்கு விடை கொடுப்பதற்காக தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக்கழகம் பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாடி தோட்டம் அமைப்பது, இயற்கை வேளாண்மை குறித்து நடைபெறும் பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

பயிற்சி வகுப்பு குறித்து தகவல்கள்:

இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ டி அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்படும் தகவல்,  பயிற்சி மையத்தில் மாடி தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது . இதில் தோட்டம் அமைக்கும் முறைகள், நாற்றங்கால் அமைத்தல் , ஊட்டச்சத்துக்கள் அளித்தல் , சீரமைப்பு முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடை குறித்தான விரிவான செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

அங்க வேளாண்மை : இதே போல வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் காய்கறி பயிர்களில் அங்க வேளாண்மை செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பில் இயற்கை முறையில் ஊட்டச்சத்து , பூச்சி மற்றும் நோய் மேலாண்மை , அங்கக தர சான்றிதழ் பெறுவது ஆகியவை பற்றி சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர் .

பஞ்சகவ்யா தயாரிப்பு : இடுபொருள்கள் தயாரித்தல் பஞ்சகவ்யா தயாரிப்பு முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் வழங்கப்படும். விவசாயிகள், மகளிர், இளைஞர்கள் , சுய உதவிக் குழுவினர், தொழில் முனைவூர் என அனைத்து தரப்பினரும் இந்த பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் . பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

இது போன்று ஆண்டு தோறும் பல்வேறு இடங்களில் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்யவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் வேளாண் பல்கலை முடிவு செய்துள்ளது . இதன் மூலம் சுயதொழில் முனைவோர்கள் , இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது .

விவசாயிகளுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் , கலந்துரையாடல் சார்த்த கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம்.

Read more: 

நள்ளிரவில் அலறியடித்த பொதுமக்கள்- எண்ணூர் உர ஆலையில் கசிந்த அமோனியா

semmozhi poonga: ஒரே இடத்தில் காணக்கிடைக்காத மலர்கள்- சென்னை மக்களுக்கு நல்ல வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)