பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 July, 2022 4:55 PM IST
Krishi Jagran Meets Union Minister

விவசாயத் துறையில் பெரிய மாற்றங்களுக்கு 'இந்திய வேளாண் பத்திரிகையாளர்கள் சங்கம் (AJAI) வழி வகுக்கும் என மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார். கிருஷி ஜாகரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக் மற்றும் குழு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரை இன்று சந்தித்தனர்.

பால்பண்ணைத் துறையின் தற்போதைய நிலை, விவசாயப் பொருட்களின் முன்னேற்றம் குறித்துக் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது, ​​விவசாயப் பத்திரிகையின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்குக் கிருஷி ஜாகரனால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தளமான 'AJAI' ஐ அமைச்சர் பாராட்டினார்.

வரவிருக்கும் ஆண்டுகளில் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு AJAI ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று அமைச்சர் பாராட்டியுள்ளார். மேலும், மார்ச் 1 முதல் 3, 2023 வரை நடைபெறவுள்ள அக்ரி ஸ்டார்ட் அப் கூட்டுறவு மற்றும் FPO உச்சி மாநாட்டில் பங்கேற்பதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

இந்திய வேளாண் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (AJAI) லோகோ மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஜூலை 21 அன்று தொடங்கப்பட்டது. லோகோவை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார். இந்த இணையதளத்தை சர்வதேச விவசாயக் கூட்டமைப்பின் (IFAJ) தலைவர் லீனா ஜோஹன்சன் தொடங்கி வைத்தார். விவசாயம், பால் பண்ணை, தோட்டக்கலை, மீன்பிடி, உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக பணியாற்றும் ஊடகப் பணியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் போன்றோருக்காக தேசிய அளவில் இத்தகைய அமைப்பு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர். கே சிங் (ICAR), டாக்டர். SK மல்ஹோத்ரா (ICAR திட்ட இயக்குனர்), Dr. ஜேபி மிஸ்ரா (OSD -கொள்கை, திட்டமிடல் மற்றும் கூட்டாண்மை) & ADG, ICAR), Dr. ஆர்எஸ் குரில் (விசி, மகாத்மா காந்தி தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம், சத்தீஸ்கர்), கல்யாண் கோசாமி (டிஜி, ஏசிஎஃப்ஐ) மற்றும் விவி சதாமாத்தே (முன்னாள் விவசாயத் திட்டக் குழு ஆலோசகர்) ஆகியோரும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.

மேலும் படிக்க

வேளாண் செய்திகள்: விவசாய வணிகத்திற்கு புதிய APP வெளியீடு!

ITOTY 2022: டிராக்டர் ஜக்‌ஷன் மற்றும் சியட் ஸ்பெஷாலிட்டி இணைந்து நடத்திய இந்தியாவின் சிறந்த டிராக்டர் நிகழ்வு!

English Summary: AJAI: Major step for transformation in agriculture: Union Minister Parshotham Rupala
Published on: 23 July 2022, 04:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now