இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது தொடர்பான விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பழைய குற்றால அருவியில் இன்று முதல் 24 மணி நேரமும் வருகை தரும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருக்கின்ற குற்றால அருவிகளில் தற்பொழுது சீசன் களைகட்ட துவங்கி உள்ள நிலையில், பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, புலியருவி உட்பட உள்ள அருவிகளில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
ஆனால் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கை, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்கலாம் எனத் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
மேலும் படிக்க
கர்ப்பிணிப் பெண்கள் இணையவழியில் அடையாள எண் பெறலாம்!
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!