திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப்பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு அகராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 1160 கன அடி வீதம் 1002.24 மி.க அடிக்கு மீகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணைப்பிறப்பித்து உள்ளது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 380.16 மி.க. அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்க ஆணை வந்துள்ளது. ஆக மொத்தம் 1382.40 மி.கன அடிக்கு மிகாமல் திறக்க ஆணை வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
இந்த பாசன நீரானது இன்று முதல் வருகின்ற ஜூலை 09 வரை (29/06.2023 முதல் 09.07.2023) எனப் பத்து நாட்களுக்குப் பயிர்களைக் காக்கும் பொருட்டும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்குக் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் திறக்கப்பட இருக்கிறது. எனவே விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
இத்தகைய நீர் திறப்பால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய பாசனப் பகுதிகளிலுள்ள 21867 ஏக்கர் நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் புதிய பாசனப் பகுதிகளில் உள்ள 25250 ஏக்கர் நிலங்களும் என மொத்தமாக 47.117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தீப்பிடிக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி! முதலிடத்தில் தமிழகம்!!