தமிழகத்தின் இட்லி அம்மாவுக்கு, அவருக்காக ஒரு வீட்டைப் பரிசாகத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினார், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. அவரைப் பாராட்டி வாழ்த்துகள் கூவிகின்றன. ஏப்ரல், 2021 இல் மஹிந்திர ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார், அதில் அவர், இட்லி அம்மா விரைவில் தனது சொந்த வீட்டியிலிருந்து தனது பிரபலமான வீட்டில் சமைத்த உணவை வழங்குவார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அன்னையர் தினமான நேற்று (08-05-2022), அனந்த் மஹிந்திரா தனது, சோந்த ட்விட்டர் பக்கத்தில் இருந்து, இட்லி அம்மா தனது புதிய மற்றும் சோந்த வீட்டிற்குள் நுழைவதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்தார். மஹிந்திரா தனது வார்த்தைகளை நிறைவேற்றினார் “. அந்த ட்விட்டில் அவர், அம்மாவுக்கு #அன்னையர் தினத்தன்று வீட்டைப் பரிசாக வழங்குவதற்காக சரியான நேரத்தில் வீட்டைக் கட்டியமைத்த எங்கள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள், அவர் ஒரு தாயின் நற்பண்புகளின் உருவகம்: வளர்ப்பு, அக்கறை மற்றும் தன்னலமற்றவர். அவளையும் அவளுடைய பணியையும் ஆதரிக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். மேலும், உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!” என பதிவிட்டியிருந்தார்.
இட்லி அம்மா-வா, யார் இவர் என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும், எனவே அறிந்திடுங்கள். தமிழ்நாட்டின் பெரு நகருக்கு அருகில் உள்ள வடிவேலம்பாளையத்தில் வசிக்கும் கமலத்தாள் என்றழைக்கப்படும் இட்லி அம்மா. அவர் சுமார் 37 ஆண்டுகளாக சாம்பார் மற்றும் சட்னியுடன் இட்லிகளை ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார்.
அவரது கதை 2019 இல் வைரலானது, இதைத் தெரிந்துக்கொண்ட மஹிந்திரா தனது ஆதரவை நீட்டியதோடு, அவரது வணிகத்தில் 'முதலீடு' செய்வதில் மகிழ்ச்சியடைவதாக எழுதினார். அதுமட்டுமின்றி, அவருக்கு ஒரு சோந்த வீட்டை வழங்குவதாகவும், அந்த வீட்டியிலிருந்து, இட்லி அம்மா தனது பணியை செய்வார் என்றும் வாக்களித்திருந்தார்.
ஆராய்ச்சி மண் வள அட்டை: இதனால் பலன் என்ன?
எனவே, அன்னையர் தினத்தில் மஹிந்திராவின் அற்புதமான வீடியோவிற்குப் பிறகு, நெட்டிசன்கள் அவரது அன்பான இந்த சைகைக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
சூரிய உதயத்திலிருந்து இட்லிகளைத் தயாரிக்கத் தொடங்கும் கமலதாளுக்கு கடினமான கால அட்டவணையை கடைப்பிடிப்பவர், மேலும் இவர், தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் வழக்கத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
காலை உணவு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மகிழ்ச்சி!