டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்துவிற்கு ரூ.30 பரிசு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் (Olympic)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விறுவிறுப்பான போட்டி (Fierce competition)
இதில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் பதக்கக் கனவுடன் பங்கேற்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் ஜியாவோ பிங்குடன் மோதினார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, சீன வீராங்கனைக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பி.வி. சிந்து, 21-13, 21-15 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
முதல் வீராங்கனை (The first player)
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், இம்முறை டோக்கியோவில் வெண்கலம் கைப்பற்றினார். ஒலிம்பிக் பதக்க மேடையில் ஏறியுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகிறது.
ரூ.30 லட்சம் பரிசு (Rs.30 lakh prize)
இந்நிலையில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்துவிற்கு மாநில அரசு சார்பில் ஊக்கப்பரிசாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
வெண்கலம் வென்றால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பி.வி. சிந்து பேட்டி
இதனிடையே பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ‘வெண்கலப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாகப் பதக்கம் வெல்வது எளிதான விஷயம் அல்ல. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் வித்தியாசமானது. நெருக்கடியும், எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். எனவே இங்கு பொறுமை காத்து முழு திறமையை வெளிப்படுத்துவது எனக்கு முக்கியமானதாக இருந்தது.
உந்துசக்தி (Motivation)
தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக இருப்பது, இன்னும் நான் நிறைய சாதனைகள் படைப்பதற்கும், கடினமாக உழைப்பதற்கும் உந்துசக்தியாக இருக்கும்.
இவ்வாறு பி.வி.சிந்து பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
Tokyo Olympic : பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம்- வாழ்த்து மழையில் பி.வி.சிந்து!
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!