1. செய்திகள்

Tokyo Olympic : பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம்- வாழ்த்து மழையில் பி.வி.சிந்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அசத்தியுள்ளார்.

புதிய வரலாறு (New history)

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்துள்ளார் பி.வி. சிந்து. அவருக்கு குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் (Olympic Badminton)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பான போட்டி (Fierce competition)

இதில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஜியாவோ பிங்கை எதிர்கொண்டார். முதல் செட் துவக்கத்தில் 4-0 என முந்திய சிந்து, பின் 11-8 என முன்னேறினார்.

பின்வாங்கிய சீன வீராங்கனை (The retreating Chinese athlete)

தொடர்ந்து அடுத்தடுத்து புள்ளிகளை குவித்த சிந்துவை தடுக்க தடுமாறினார் ஜியோவோ. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சிந்து, முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார்.

சமநிலை (Balance)

தொடர்ந்து இரண்டாவது செட் துவக்கத்தில் ஆதிக்கம் (5-2) செலுத்திய சிந்து பின் 11-8 என முந்தினார். துரத்திய சீன வீராங்கனை ஜியாவோ தொடர்ந்து 3 புள்ளிகள் பெற, ஸ்கோர் 11-11 என சமநிலையை எட்டியது.

சூப்பர் ஸ்மாஷ் (Super smash)

சூழ்நிலைக்கு ஏற்ப சுதாரித்துக் கொண்ட சிந்து 18-14 என வெற்றியை நெருங்கினார். கடைசியில் சூப்பர் 'ஸ்மாஷ்' அடித்த சிந்து வெண்கலப்பத்திற்கான புள்ளியை பெற்றார்.

வெண்கலப்பதக்கம் (Bronze medal)

53 நிமிட போராட்டத்தின் முடிவில் சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கம் தட்டிச் சென்றார்.

முதல் வீராங்கனை (The first player)

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், இம்முறை டோக்கியோவில் வெண்கலம் கைப்பற்றினார்.

வாழ்த்து மழை (Greetings rain)

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிவி சிந்துவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத்தலைவர் (President)

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், பி.வி. சிந்து தனது நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் (Prime Minister)

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பி.வி. சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் (Chief Minister)

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றுள்ள சிந்துவுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை நாட்டிற்காகப் பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பி.வி. சிந்துவுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!

English Summary: Tokyo Olympic: Bronze medal in badminton - PV Sindhu in congratulatory rain!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.