News

Thursday, 22 September 2022 05:48 PM , by: T. Vigneshwaran

Animal Feed Subsidy

திருச்சி மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தியை பெருக்கவும் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு சார்பில் கால்நடை வளர்போருக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவீதம் மானிய விலையில் பண்ணை கருவிகளை வழங்கி, அவர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3,200 மெட்ரிக் டன் அதற்கு மேலாக ஊறுகாய் புல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, புல் அறுவடை செய்தல் மற்றும் புல் நறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் போன்றவை வாங்க ஒரு விவசாயிக்கு 25 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், தனி நபர், பால் பண்ணையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், கால்நடை வளர்ப்போர்கள், கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள் வரும் 26-ம் தேதிக்குள் அவரவர் கிராமத்தின் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்கள் தெரிந்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

நெல்லையில் ரூ. 10.62 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்

மாரடைப்பு வருவதற்கான '5' முக்கிய அறிகுறிகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)