1. செய்திகள்

மாரடைப்பு வருவதற்கான '5' முக்கிய அறிகுறிகள்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Heart Attack

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் இதய நோய், குறிப்பாக பக்கவாதம் ஆகியவற்றின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர். இருதயநோய் நிபுணர்களும் ஹார்மோன்களே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதுகின்றனர். சில சமயங்களில் ஆரோக்கியமாக இருக்கும் பெண்களும் கூட இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அவர்களின் மோசமான வாழ்க்கை முறை மற்றும் மரபணுக்கள் இரண்டும் காரணமாக இருக்கலாம். உடல்நலம் தொடர்பான எந்த பிரச்சனையும் ஏற்படுவதற்கு முன்பே நம் உடல் அறிகுறிகளை கொடுக்கத் தொடங்குகிறது. சரியான நேரத்தில் அவற்றை அடையாளம் கண்டு கவனமாக இருக்க வேண்டும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு பெண்களிடம் (முன் மாரடைப்பு அறிகுறிகள்) காணப்படும் அறிகுறிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

இதய ஆரோக்கியத்தில் ஹார்மோன்களின் தாக்கம் என்ன?

அதிக ஹார்மோன் அளவுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன், இரத்த நாளங்களை அதிகம் பாதிக்கிறது. நாளங்களின் நீட்சி காரணமாக, தமனி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். பெண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கும் மாரடைப்பின் சில அறிகுறிகளைப் பற்றி நிபுணர்கள் கூறியுள்ளனர், அதை தெரிந்துக்கொள்வோம்.

மாடைப்பு வருவதற்கு முன் பெண்ரகளிடம் இந்த 5 அறிகுறிகள் தென்படும்

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பே, உடல் சிக்னல்களை கொடுக்கத் தொடங்குகிறது என்று மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் நீரஜ் குமார் விளக்குகிறார். எனவே உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* எலும்புகளில் வலி.
* மார்பு வலி.
* மயக்கம் மற்றும் பலவீனம்,
* தலைவலி மற்றும் தலைச்சுற்றலுடன் மூச்சுத் திணறல்.
* விரைவான இதயத் துடிப்பு

அதிக கொழுப்புச்ச்த்து

ஊடக அறிக்கைகளின்படி, உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜனின் அளவு பெண்களை அதிக கொழுப்பிலிருந்து பாதுகாக்கிறது, ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையத் தொடங்குகிறது, இதன் காரணமாக உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக, மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது மிகவும் பொதுவானது, இது மாரடைப்புக்கு வழிவகுக்கும். இது தவிர, சில பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க:

பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?

விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் முதல்வர், காரணம் என்ன?

English Summary: The '5' main symptoms of a heart attack Published on: 21 September 2022, 05:58 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.