10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!
10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்த் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினமான திங்களன்று வெளியிடப்பட்டது. வெளிவந்த முடிவுகளில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: மலிவான விலையில் 5G ஐபோன்! இன்றே வாங்குங்க!!
இந்த நிலையில் அவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வருகிற 24-ந்தேதி வெள்ளியன்று (நாளை மறுதினம்) காலை 11 மணி முதல் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, தனித்தேர்வர்களுக்குத் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!
மேலும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என இரு தரப்பினரும் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்ட்தில் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!
அதோடு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கும் 22-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி மாலை 5 மணி வரையிலும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் எழுதிய தேர்வு மையங்களிலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க
அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது எப்படி? இன்றே தொடங்குங்கள்!
பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!