விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் 02-ஆம் தேதி வரையில் பொது மக்களை மகிழ்விக்கும் வகையில் அரசு சார்பில் நிகழ்வுகள் நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்
”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” எனும் தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ. மேகநாதரெட்டி கலைநிகழ்ச்சிகள் வரும் 24 ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் படிக்க: Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு
”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கண்காட்சி நிகழ்வுகள் விருதுநகர் இராமமூர்த்தி சாலை, அரசு தலைமை மருத்துவமனை அருகில் அமைந்துள்ள கந்தசாமி இராஜம்மாள் திருமண மண்டபத்தில் காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற இருக்கிறது. ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து இது நிகழ இருக்கிறது.
குறிப்பாகப் புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் செயல்பாடுகளையும், அரசின் சிறப்புத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம், காலை உணவு திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும், இல்லம் தேதி கல்வி, நான் முதல்வன், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு உள்ளிட்ட பல அரசு திட்டங்களைக் குறித்தான படக் காட்சிகள் வைக்கப்பட இருக்கின்றன. அதோடு, மாவட்ட அளவில் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.
கண்காட்சி நாட்களில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், கலைப் பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பாக ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
மகளிர் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக கைவினை பொருட்கள் கண்காட்சி, தெருவோர உணவகம் முதலானவைகள் மூலம் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன. பல்வேறு அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகவே, பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கேற்க வேண்டும் என்றும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து பயனடைய வேண்டும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவு! ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்!