வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்! உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட் cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன? குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 September, 2021 10:37 AM IST

கொரோனா 3- வது அலை நெருங்கி வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு (World Health Organization)

கொரோனா தடுப்பூசி போடாத மக்களிடையே டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாகப் பரவி சமூகப் பரவலை ஏற்படுத்தக்கூடும். அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே டெல்டா பரவலை கட்டுப்படுத்த முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

ஏனெனில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு டெல்டா ப்ளஸ் வைரசால் ஆபத்தா என்பது குறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

தடுப்பூசியேத் தீர்வு (Vaccine solution)

மூன்றாவது அலை டெல்டா ப்ளஸ் வைரசால் மட்டுமே ஏற்படும் என்றில்லை. இந்த இடைப்பட்டக் காலத்தில் உருமாற்றம் அடைந்த வேறொரு கொரோனா வைரஸ் கூட கண்டறியப்படலாம். எனவே, எதுவாக இருந்தாலும் மூன்றாவது அலை உருவாகுவதற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக நல்லது.

அட்மிஷன் குறைந்தது (Admission is low)

பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது கடந்த வருடத்தைப் போலவே தற்போதும் சற்று அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கே 65% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பலனாக, மருத்துவமனைகளில் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவுத் தொற்று தீவிரமடையாமல் இருக்கிறது.

டெல்டா வேரியன்ட்டுக்கு எதிராகவும் தீவிர நோய் நிலையை மட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா 20% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்கியிருக்கிறது. இது, நிச்சயம் நம்மாலும் மூன்றாம் அலையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.

3 குணாதிசயங்கள் (3 Characteristics)

சுகாதாரத்துறை தகவலின்படி, டெல்டா ப்ளஸ் மூன்று குணநலன்களுடன் இருக்கிறது.

1. கூடுதல் வேகத்துடன் பரவும் தன்மை
2. நுரையீரல் சுவாசப்பாதை செல்களில் அதிகமான ஈர்ப்புடன் பற்றுதல் தன்மை
3. ஆண்ட்டிபாடி மருந்துகளின் திறன் இந்த வேரியண்ட்டுக்கு எதிராக குன்றுவது

இந்த வேரியண்ட்டுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் நோய் தடுப்பு திறன் குறித்து,ஐ.சி.எம்.ஆர். (IMCR) ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலையில் டெல்ட்டா வேரியண்ட் முக்கியப் பங்காற்றியது. இந்த இரண்டாவது அலையில் கோவேக்சின்/ கோவிஷீல்டு போடப்பட்ட மக்கள் தீவிர தொற்றில் இருந்து காக்கப்பட்டனர்.

எச்சரிக்கை தேவை (Caution is required)

எனவே நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, எதிர்வரும் மூன்றாவது அலையில் மருத்துவமனை சேர்க்கை, ஆக்சிஜன் தேவைப்படும் நிலை, மரணங்கள் மிகவும் குறைந்தும் அரிதாகவும் காணப்படும் வாய்ப்பே இருக்கிறது.

அதேநேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அலட்சியமாக இருக்கக்கூடாது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, சமூக இடைவெளியை தொடர்ந்து பேணுதல் வேண்டும். இன்னும் நான்கு முதல் எட்டு வாரங்களில் நிலைமையை இன்னும் சிறப்பாக கணிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
நம் நாட்டுக்கான மூன்றாம் அலை இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களில் நிகழக்கூடும். இந்தியாவில் உருவாகியிருக்கும் B.1617 வகை டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வேரியண்ட்களின் தாக்கம் மூன்றாம் அலையில் அதிகம் இருக்கலாம். மூன்றாம் அலை தீவிரம் இந்த இரண்டாம் அலையின் தீவிரத்தை ஒட்டியோ அல்லது அதை விட குறைவாகவோ இருக்கவே வாய்ப்பு உண்டு.

மோசமான பாதிப்பு (Bad impact)

இருப்பினும் மூன்றாம் அலையைக் கண்ட முக்கிய நாடான அமெரிக்காவில் மூன்றாம் அலைதான் மிக மோசமான பாதகங்களை உருவாக்கியது என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கு மூன்றாம் அலையை அவர்கள் சந்திக்கும் போது தடுப்பூசி வெளிவரவில்லை. ஆனால் நமக்கு தடுப்பூசி எனும் பேராயுதம் நம் கையில் இருக்கிறது.

45+ வயதுக்கு மேல் (Over 45+ years)

மூன்றாம் அலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதே இந்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பாக இருக்கிறது. ஆனால் அந்த அலையின் தாக்கத்தைக் குறைக்க இயலும். இந்த வருடத்தின் இறுதி மாதங்களை எட்டுவதற்குள் தடுப்பூசியை 45+ வயதுக்கு மேல் உள்ள மக்கள் அனைவரும் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், இந்த வயதினரிடையேதான் 90% மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது.

அச்சம் தேவையற்றது (Fear is unnecessary)

தொற்று பெற்றிருந்தாலும் கண்டிப்பாக மூன்று மாதம் கழித்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசிகளை விரைவாக பெற்று எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் விரைவாகப் பரிசோதனை முடிந்து கிடைக்க வேண்டும். மூன்றாம் அலை நிச்சயம் குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்ற அச்சம் தேவையற்றது.

தமிழக அரசு மூன்றாம் அலை வருவதற்கு முன்பு 5 கோடி மக்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று சிறப்பான இலக்கை நோக்கி முன்னேறுகிறது. வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. இது போன்ற இலக்கை நாம் அடைந்தால் சிறப்பாக இருக்கும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
இவ்வாறு அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!

கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் 2 கொரோனா தடுப்பூசி?

English Summary: Approaching Corona 3rd wave- Danger for those not vaccinated!
Published on: 04 September 2021, 10:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now