இலங்கை மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Upper Air Circulation) காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் புதுக்கோட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பயிர்கள் நாசம் (Destruction of crops)
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிதமான மழை (Moderate rain)
அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசான மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிக கனமழை (Very heavy rain)
நெல்லை , புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
வானிலை முன்னெச்சரிக்கை (Weather Forecast)
11.01.202
இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படம். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச மழைபதிவு (Maximum rainfall)
அதிகப்பட்சமாக புதுக்கேட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
இன்று முதல் ஜனவரி 14ம் தேதி வரை, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடாப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 44 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதேபோல் 12,13ம் தேதிகளில் லட்சத்தீவு பகுதிகளில், பலத்த சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!