தமிழகத்தில் புகழ்பெற்ற, அதேவேளையில் சர்ச்சைக்குப் பெயர் போன பிரபல சாமியார் நித்தியானந்தாவை, விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். பாரம்பரிய மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக, அவர் நியமிக்கப்பட்டதும், பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
உடல்நிலை பாதிப்பா?
தன் மீதான புகார்கள் குவியத்தொடங்கியதும், நாட்டை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, அங்கு வசிப்பதாக தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால், கடந்த ஓராண்டாக அவரது செயல்பாடுகள் குறைந்தன. பல மாதங்களாக, அவரது நேரடி வீடியோக்கள் எதுவும் வரவில்லை. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தன.
சிகிச்சை
இந்நிலையில், சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆரோக்கியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதற்கு, மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது. இது, அவரது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி
நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு இந்தியாவிலும், பல நாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இவற்றை கைப்பற்ற, அவருடன் இருப்பவர்களே, ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க...