1. செய்திகள்

தமிழக பெண்ணை கரம்பிடித்த வங்கதேச மங்கை -அடக்கொடுமையே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The Bangladeshi women married Tamilnadu woman!

தொட்டுத் தொடரும் திருமண பந்தம் என்பது, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கேட்டும்போதே, இந்தியக் கலாச்சாரம், எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நமது முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் சில திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலம் மலரும் நட்பின் வாயிலாகவே நிச்சயிக்கப்படுகிறது. அதிலும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களே அதாவது ஆண், ஆணையும், பெண், பெண்ணையும் தங்கள் வாழ்க்கை துணையாக கரம் கோர்த்து திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் வினோத சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஆடம்பர திருமணம்

அந்த வகையில் ஒரே பாலினத்தை விரும்பும் 'லெஸ்பியன்' ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்‌ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும், வங்காளதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சுபிக்‌ஷா தமிழக பாரம்பரிய முறைப்படி மடிசார் சேலை அணிந்தவாறு தனது தந்தையின் மடியில் அமர, எதிர் முனையில் பைஜாமா அணிந்தவாறு டினா தாஸ் உறவினரின் மடியில் அமர ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். சுபிக்‌ஷாவின் தந்தை முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். சம்பிரதாயம் முடிந்ததும் இல்வாழ்க்கையில் சிறகடித்து பறக்கிறது லெஸ்பியன் ஜோடி.

பாரம்பரியம்

ஆடிட்டரான சுபிக்‌ஷாவின் குடும்பம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை பூர்வீகமாக கொண்டது.மதுரையில் இருந்து அவருடைய குடும்பம் கத்தார் நாட்டுக்கும், பின்னர் அங்கிருந்து கனடாவில் உள்ள கல்கரி நகருக்கும் இடம் பெயர்ந்தது. சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா, கல்கரி நகரில் சிறுவர்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார். வங்காளதேசத்தின் வடகிழக்கில் உள்ள சிறிய நகரான மூல்விபசாரை பூர்வீகமாக கொண்டவர் டினா தாஸ்.

இவருடைய சகோதரி, திருமணமாகி கனடாவின் மொண்ட்ரியால் நகரத்தில் வசித்து வந்தார். அவரோடு, கடந்த 2003-ம் ஆண்டு தனது பெற்றோரோடு ஐக்கியமாகினார் டினா தாஸ். சிறு வயதில் இருந்தே டினா தாசுக்கு லெஸ்பியன் உணர்வுகளில் ஈடுபாடு ஏற்பட்டது.
இதனை ஒரு நோயாக கருதிய அவரது பெற்றோர், 19 வயதில் ஆண் ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் 4 ஆண்டுகளில் அந்த பந்தம் அறுந்து போனது.

மேலும் படிக்க...

ரயில் பயணிகளுக்கு சிறை தண்டனை உறுதி!

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்வு!

English Summary: The Bangladeshi women married Tamilnadu woman! Published on: 04 September 2022, 06:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.