தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துவருவதால், ரேஷன் பொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் பொருள் (Ration Things)
அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆயத்தக் கூட்டத்தில் ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அதேபோல ஜூன் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
மேலும் இதற்கு முன்பாக நாகை மாவட்டத்திலும் வேலை நிறுத்தம் செய்வதாக ஊழியர்கள் முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.
இனிவரும் நாள்களில் அடுத்தடுத்து பல மாவட்ட ஊழியர்கள் முடிவை அறிவிக்க உள்ளனர். தொடர்ச்சியாக மூன்று நாள்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில் ஜுன் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை 7-ம் தேதிக்கு முன்பாக வாங்கிக் கொள்ள ரேஷன் அட்டைதாரர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
ரேஷன் பொருள் வாங்க கைரேகை தேவையில்லை: அமைச்சர் அறிவித்த புதிய திட்டம்!