1. Blogs

பென்சனர்களுக்கு குட் நியூஸ்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தற்போது அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட வற்றை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால் ஊதிய உயர்வு வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பென்சனர் (Pensionors)

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் கடந்த 1988 முதல் 2015ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 2016 செப்டம்பர் முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மட்டுமே ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வுதியம் வழங்கப்படும் என்ற உத்தரவு பாரபட்சமாக உள்ளது.

அதனால் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும்ஏழாவது ஓய்வு ஊதிய குழு அடிப்படையில் ஓய்வூதியமும் அத்துடன் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

போஸ்ட் ஆபிஸ் பயனாளர்களுக்கு இன்று வெளியானது அருமையான அறிவிப்பு!

கூடுதல் வட்டி! அதிக லாபம்: பிக்ஸ்ட் டெபாசிட் ஒரு வரபிரசாதம்!

English Summary: ‌Good news for pensioners: HighCourt action! Published on: 04 June 2022, 06:34 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.