News

Sunday, 16 May 2021 10:09 AM , by: Daisy Rose Mary

ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக முதல்வரின் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

முதல் 5 அறிவிப்புகள்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி தனது முதல் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைக்கப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்த விலை குறைப்பு மே 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் அறிவித்தார்.

அதன் படி, தமிழக அரசு அறிவித்துள்ள ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய விலை பட்டியல்

ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கும், இன்று முதல் விற்பனை செய்யப்படும். டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21-க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18-க்கும் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க....

ரெம்டெசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

அரசு தன்னால் இயன்றவரை கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிவருகிறது - பிரதமர் மோடி!!

கொரோனா நிவாரண நிதி- இப்போ இல்லேன்னா 18க்குப் பிறகு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)