1. செய்திகள்

கொரோனா நிவாரண நிதி- இப்போ இல்லேன்னா 18க்குப் பிறகு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Corona Relief Fund - Not Possible to get Now After 18!

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக  ரூ.2000 ரூபாய் விநியோகம் தொடங்கியது.  தற்போது டோக்கன் பெறாதவர்கள், மே 18ம் தேதிக்குப் பிறகு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி (Election promise)

தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

முதல் கையெழுத்து (The first signature)

அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

மே மாதம் முதல் தவணை (The first installment in May)

தற்போது கொரோனாப் பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3-ந்தேதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

திட்டம் துவக்கம் (Scheme  Launch)

அதன்படி கடந்த 10-ந்தேதி தலைமைச் செயலகத்தில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

டோக்கன் (Token)

இதன் அடிப்படையில், கடந்த 4 நாட்களாக அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதிக்கான டோக்கன் வழங்கப்பட்டது.அந்த டோக்கனில் எந்த தேதியில் வந்து ரே‌ஷன் கடைகளில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரூ.2000 விநியோகம் (ரூ.2000 விநியோகம்)

அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் இன்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் தொடங்கிவைத்தார். கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

4 நோட்டுகள் (4 notes)

ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் 500 ரூபாயாக 4 நோட்டுகள் வழங்கப்பட்டன.
அந்தந்த பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரம் பணத்தை வழங்கினார்கள்.

சமூக இடைவெளி (Social distance)

கூட்டத்தைக் கட்டுப்படுத்த தினமும் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு இருந்ததால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ரே‌ஷன் கடை முன்பு வட்டம் வரையப்பட்டு இருந்தது.

போலீசார் கண்காணிப்பு (Police surveillance)

ஒவ்வொரு ரே‌ஷன் கடை முன்பும் போலீசார் இதைக் கண்காணித்து கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமமின்றி நிவாரணத் தொகையை வாங்கிச் சென்றனர். மொத்தம் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

18ம் தேதிக்குப் பிறகு (After the 18th)

டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி-நேரங்களில் சென்று வாங்க முடியாதவர்கள் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு ரே‌ஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுமையாகப் பெற வாய்ப்பு (Chance to get patient)

எனவே பொதுமக்கள் பணத்தை வாங்க முண்டியடிக்கத் தேவையில்லை. பொறுமையாகச் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் யோசனை (Public idea)

இருப்பினும் இந்தத் தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினால், மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றும் பொதுமக்கள் யோசனை தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!

அரிசி அட்டை தாரருக்கு ரூ.4000, பால் விலை குறைப்பு - முத்தான 5 திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்து!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!

English Summary: Corona Relief Fund - Not Possible to get Now After 18! Published on: 15 May 2021, 10:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.