வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு (Bill) கடந்த மாதம் 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (President Ramnath Govind) ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து சட்டமாக மாறின.
அய்யாக்கண்ணு மனுத்தாக்கல்:
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு (Ayyakannu), உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்த வழக்கு இனி வரும் நாட்களில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி, விவசாய சங்கத் தலைவரின் இந்த செயலை, விவசாயிகள் வரவேற்று உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் நிலவி வருவதால், பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். வழக்கின் முடிவைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்!
மரங்களை அடகு வைத்தால், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! கேரளாவில் புதிய திட்டம்!