ஆன்லைன் ரம்மி தொடர்பான அரசாணையை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்களில் பரிந்துரைகளை வழங்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டவை பின்வருமாறு;
- இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
- இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியது.
- இதில் பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பெரிதளவில் வலுத்து வருகின்றன.
IRCTC டிக்கெட் முன்பதிவில் திடீர் மாற்றம்: இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்.!
கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஆட்சி செய்யும் தமிழக அரசு ரம்மி விளையாட்டுக்கு எதிராகச் சட்டத்தினை இயற்ற குழு ஒன்றை அமைத்துள்ளது.
ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
இதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகைய செய்ல்பாடுகளால், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களில் ஐஐடி நிபுணர் சங்கரராமன், சினேகா நிறுவனர் மற்றும் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் மற்றும் கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்குவர்.
இனி வீட்டிலிருந்தபடியே மின் கட்டணம் செலுத்தலாம்! விவரம் உள்ளே!
அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராய வேண்டும் எனவும், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்ந்து சட்டத்தினை இயற்ற வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரம்மி ஆடினால் கடுமையான தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வா? கட்டணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!