பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கானப் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பானத் தகவலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள்
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
4 கட்டங்களாக
இது குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு செப்.10 முதல் நவ.13 வரை 4 கட்டங்களாக நடைபெறும்.செப். 10-12 முதற்கட்டமும், செப்.25-27 இரண்டாம் கட்டமும், அக்.13-15 3ம் கட்டமும், அக்.29-31 வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல் பி.இ., படிப்புகளில் தமிழ் பாடம் மற்றும் புதிய பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்.
முதல்வர் வேண்டுகோள்
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்த முதல்வர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.அதே ஏற்றுக்கொண்டு அனைத்து மாணவர்களும் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க...