கொரோனா வைரஸ் தொற்றால், கடும் பொருளாதார பாதிப்பு அடைந்த நடுத்தரக் குடும்பத்தினர் பலர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா (Corona)
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தக் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது.
ஊதியம் இல்லை (No pay)
இதனால், அரசு ஊழியர்களுக்கு வழக்கம்போல் ஊதியம் கிடைத்தபோதிலும், தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு வருமானம் இல்லை என்று கூறி, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தன.
நிதி நெருக்கடி (The financial crisis)
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஊதியம் வழங்காததால், தொழிலாளர்கள் பலரும் நிதிச்சுமையை எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால் பொருளாதார ரீதியாகப் பெரிய சிக்கல்களை சந்தித்து வரும் பெற்றோர், தங்களது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கட்டணக் கொள்ளை (Charge robbery)
இதனிடையே கொரோனாத் தொற்று காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. பொதுத்தேர்வு இல்லாமலேயே 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.
இருப்பினும், அந்தக் கட்டணம், இதற்கு கட்டணம் எனக் கூறி, வழக்கம்போல் தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணங்களை அறிவித்ததுடன் அதனை உடடினயாகச் செலுத்துமாறும் நெருக்கடி கொடுத்தன.
கவனம் திரும்பியது (The focus turned)
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு போதிய பணம் இல்லாததால் அரசுப் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆசிரியர்கள் ஆர்வம் (The authors are interested)
மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு காரணம், அரசு பள்ளி ஆசிரியர்களின் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதே நேரத்தில் பல கிராமங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஒலிபெருக்கி மூலமும், வீடு வீடாக சென்றும், மாணவர்களின் படிப்புக்கும், கல்வித்திறன் மேம்பாட்டுக்கும் நாங்கள் கேரண்டி’ என பெற்றோர்களிடம் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு நிகர் (Net for private schools)
மேலும் அரசு பள்ளிகளில் இலவச கல்வி முறையோடு, தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும் மாறியுள்ளன. அரசின் பல்வேறு உதவிகள் அனைத்தும் கிடைப்பதாலும் தற்போது இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
Tokyo Olympic- 30 வினாடிகள் மட்டும் மாஸ்க்கைக் கழற்றலாம்!
தமிழக கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்