இந்தியாவில், நீர்மேலாண்மையை (Water Management) சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்களுக்கான விருதுப்பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
சிறந்த மாவட்டங்கள்:
ஆறுகளை உயிர்பிக்க செய்த சிறந்த மாவட்டங்களுக்கான பட்டியலில் வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடம்பிடித்துள்ளன. நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வாகியுள்ளது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி (Madurai Corporation) 2வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, மதுரை மாநகராட்சி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீர் நிலை பாதுகாவலர்கள் பட்டியலில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முதல் பரிசையும், அண்ணா பல்கலை பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.
விர்ச்சுவல் முறையில் விருது:
தடுப்பணை கட்டுதல், சொட்டு நீர் பாசன செயல்பாடு, பாசன வசதியை அதிகரித்தல், மழைநீர் சேகரிப்பு திறன், தண்ணீர் கணக்கீடு குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பரிசுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகளானது நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் விர்ச்சுவல் (Virtual) முறையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு விருது (Award) வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பின்னலாடை தொழில் துறைக்கு, மானியத்தோடு தனி வாரியம் அமைக்க கோரிக்கை!