ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளருக்கு, உச்ச நிதிமன்றம், விடுதலை தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு முன்வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை முன் வைத்தது. இதுவே தற்போது அவரின் விடுதலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தம்மை, இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இன்று (மே 18, 2022) தீர்ப்பு வழங்கியது. அதில், கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வாதம் தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி, இந்த வழக்கில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடதக்கது.
அவர் வைத்த வாதங்கள் ஓர் பார்வை:
1. இந்த வழக்கில் தண்டனை கைதி, ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார் எனவும், சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது எனவும், அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
2. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறது, இதுவே குழப்பங்களுக்கான முக்கிய காரணமாகும். ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி, இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார்.
ஆளுனர் விருப்பு வெறுப்பு
3. ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும் எனவும், மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது எனவும், அவர் குறிப்பிட்டார். யாரை விடுவிக்க வேண்டும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். அதில் ஆளுநர் தனிச்சையாக முடிவை எடுக்க முடியாது, எனவும் அவர் குறிப்பிட்டார்.
4. ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர் என்பதையும், அவர் சுட்டிக்காட்டினார். அவர் அதில் முடிவு எடுத்திருக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது எனவும், அவர் குறிப்பிட்டார்.
விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!
5. அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார் எனவும், ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அவர் இப்படி செய்தது மிகப் பெரிய பிழை என்றும், குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு, தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜார் ஆன ராகேஷ் திவேதியின் வாதங்கள் இருந்தன என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
6 மாதங்களுக்குள் 'Green Card' வழங்க அமெரிக்கா அதிபருக்கு, குழு பரிந்துரை