1. செய்திகள்

6 மாதங்களுக்குள் 'Green Card' வழங்க அமெரிக்கா அதிபருக்கு, குழு பரிந்துரை

Deiva Bindhiya
Deiva Bindhiya

Committee recommends to US President to issue 'Green Card' within 6 months

வாஷிங்கடன்: 'அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, 'கீரின் கார்டு' கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இது, அமெரிக்க வாழ், இந்தியர்களுக்கு, பெரிய அளவில் பயனலளிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு, பல்வேறு வகை விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 'எச்1பி விசா' அதிக அளவில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடதக்கது. கம்ப்யூட்டர் மென்பொருள் இன்ஜினியர்கள் உட்பட, தொழில்முறை பணிகளில் அதிக அளவில், இது வழங்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, 'கிரீன் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையில் பல சிக்கல்கள் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டுக்கும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில், 7 சதவீதம் மட்டுமே கிடைக்க பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து, நீண்ட காலம் காத்திருக்கும் நிலை வந்துள்ளது.

கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

இந்நிலையில், அமெரிக்க அதிபருக்கு ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள், பசிபிக் தீவுகளைச் சேர்ந்தோருக்கான ஆலோசனை குழுவின் கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. அதில், கிரீன் கார்டு விசா வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தும்படி, அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் ஜெயின் புதோரியா வலியுறுத்தி உள்ளார். இதை, அந்தக் குழுவில் பங்கேற்ற, 25 உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த குழு, தன் பரிந்துரையை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: விசா வழங்குவதில், 1990களில் உருவாக்கப்பட்ட விதிமுறைகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், அதுபோல், கிரீன் கார்டு வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2021 - 2022 நிதியாண்டில், மொத்தம் வழங்க திட்டமிடப்பட்ட, 2.26 லட்சம் கிரீன் கார்டுகளில், 65 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோருக்கு கிரீன் கார்டு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ICAR Recruitment: பட்டதாரிகள் கவனத்திற்கு, ரூ 44.000 சம்பளம்! விவரம் உள்ளே

இந்தாண்டு ஏப்ரல், மாத நிலவரப்படி, 4.21 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை, அடுத்த ஓராண்டுக்குள் வேகமாக பரிசீலித்து, நிலுவையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்த ஆறு மாதங்களுக்குள் அதன் மீது முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க குடியேற்ற துறை மேற்கொள்ள வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ஒப்புதல் அளித்ததும், இந்த பரிந்துரை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக, கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க:

கோதுமை ஏற்றுமதி தடை அறிவிப்பை தளர்த்த மத்திய அரசு தீர்மானம்!

விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!

English Summary: Committee recommends to US President to issue 'Green Card' within 6 months

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.