கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், தமிழகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும், பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், பேருந்துகளை நவீனமயமாக்கல் மற்றும் கிளை வளாகங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விரிவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்து நெறிப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும், மினி பேருந்துகள் இயக்கம் குறித்து, மின் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்துதாக கூறிய அவர், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை முடிவுற்ற பின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் போக்குவரத்து துறையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் படிக்க:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.48,000 கோடி இழப்பு!