News

Saturday, 31 October 2020 10:53 AM , by: Elavarse Sivakumar

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிருக்கு (Maize Crop Insurance) பயிர் காப்பீடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் சி.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  • பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2020 முதல் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோள பயிருக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் திருந்திய பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது

  • மக்காச்சோளப் பயிருக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் பங்கீட்டு காப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.285 மட்டும் செலுத்த வேண்டும்

  • விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்புக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரிமியம் தொகையைச் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரூ.25 ஆயிரம் முதலீட்டில் லட்சம் சம்பாதிக்க உதவும் பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்பு!

ஒரே விவசாயிக்கு அதிகளவில் உரம் விற்றால் விற்பனையாளரின் உரிமம் ரத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)