1. செய்திகள்

ரூ.25 ஆயிரம் முதலீட்டில் லட்சம் சம்பாதிக்க உதவும் பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Highly profitable baguette timber product with a low investment of Rs. 25,000!

Credit : Dailyhunt

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துவிட்டதால், மக்கள் அனைவரும் அன்றாட உபயோகத்திற்கு பழைய பொருட்களை நாடத் துவங்கிவிட்டனர். அதாவது ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், பாக்குமட்டைத் தட்டு, வாழை இலை உள்ளிட்டவற்றின் பக்கம் மக்களின் கவனம் திரும்பிவிட்டது.

எனவே இந்த சமயத்தில் இதுதொடர்பான வியாபாரத்தைக் கையில் எடுப்பது, இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் நல்ல பலனைக் கொடுக்கும். அந்த வகையில் பாக்குமரத்தட்டு தயாரித்து விற்பனை செய்வது குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.

சிறப்பம்சங்கள் (Features)

  • கெமிக்கல் இல்லாத பொருள்.

  • சூடான மற்றும் குளிர்ந்த பொருட்களை வைப்பதற்கு ஏற்றது.

    ஆயுர்வேத குணங்கள் அடங்கியது.

  • இலகுவாக மக்கும் தன்மை கொண்டதால் சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் ஏற்றது.

  • அதிக சுகாதாரமானது. 100 சதவீதம் இயற்கையானது.

  • மிக முக்கியமாக இந்தப் பொருட்களை தயாரிப்பதற்காக எந்த மரங்களும் வெட்டப்படுவதில்லை.

பாக்குமட்டைத் தட்டு

பொதுவாக இதனைத் தயாரிப்பவர்கள், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இரண்டு வகைகளில் தயாரிக்கின்றனர்.  உள்நாட்டு வகைகளில், 2 அங்குலத்தில் இருந்து 12 அங்குலம் வரை தயாரிக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கு, உணவு கன்டெய்னர், குழித்தட்டு, காய்கறி பரிமாறும் தட்டு உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம். குறிப்பாகத் தரத்தில் எந்தவித உடன்பாடும் செய்துகொள்ளாத பட்சத்தில், நல்ல விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்.

Credit : Dinamani

மூலதனம் (Investment)

இந்தத் தொழிலைத் தொடங்க ரூ.25 ஆயிரம் முதலீடும், 8ம் வகுப்பு தேர்ச்சியுமே போதுமானது.

பயிற்சி (Training)

கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள தமிழக வேளாண் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் மையத்தை அணுகலாம்.

25% மானியம் (Subsidy)

இந்த மையத்தில் பயிற்சி பெற்றால், அவர்களே குறு மற்றும் சிறுதொழில் முனைவோர் அமைப்பு மூலம் திட்டமதிப்பில் 95 %த்தை பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் வங்கிக்கடனாகப் பெற்றுத் தருவர். மேலும், 25 % அரசு மானியத்தையும் பெற்றுத்தருவார்கள்.

இயந்திரம் (Machine)

  • பாக்கு மரத் தட்டு தயாரிக்கும் இயந்திரத்தின் விலைகு குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை.

  • இதில் ஆறு Dye இருக்கும். இதன் மூலம் 20 வினாடிகளில் ஒரு தட்டைத் தயாரிக்க முடியும்.

  • நாள் ஒன்றுக்கு எளிதாக 3000 தட்டுகள் வரை தயாரிக்கலாம்.

இடம் (Place)

600 முதல் 800 சதுர அடி பரப்பளவு தேவை. ஆரம்பத்தில் தொழில் தொடங்க விரும்புவோர், மொட்டை மாடியைக் கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூலப்பொருள் (Raw Materials)

கோவை, சேலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆண்டுமுழுவதும் பாக்கு மட்டைகள் தட்டுப்பாடு இன்றிக் கிடைக்கும்.
அதனை வாங்கிக்கொண்டு, நீங்களும் ஆண்டு முழுவதும் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

மேலும் படிக்க....

இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு என்ன விலை கிடைக்கும்? TNAUவின் கணிப்பு

பாழ்பட்ட நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் 20 வகை விதைகள்!

English Summary: Highly profitable baguette timber product with a low investment of Rs. 25,000!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.