
கிரிஷி ஜாக்ரன் மீடியா நிறுவனம் தனது 26வது நிறுவன தினத்தை நேற்று தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது. டெல்லியில் உள்ள சில்வர் ஓக் மைதானத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அல்போன்ஸ் கண்ணன்தானம் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கிரிஷி ஜாக்ரன் மீடியா நிறுவன ஊழியர்களின் கலாச்சார நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை மேலும் வண்ணமயமாக மாற்றியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மொழியாளர்கள் கலந்து கொண்டனர்.
கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி.டோமினிக் வரவேற்றுப் பேசினார். கடந்த 25 ஆண்டுகளில் விவசாயிகளின் நலன்களுக்காக ஊடக அமைப்பு புரட்சிகரமாகச் செயல்பட்டுள்ளதை அவர் நினைவுகூறிப் பேசினார். அந்நிகழ்வின் போது வேளாண் கண்காணிப்பு இயக்குநர் ஷைனி டொமினிக் ஆகியோர் மேடையில் உடனிருந்தனர்.
கடந்த 25 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு விவரங்கள், அறிவு மற்றும் தகவல்களை வழங்க கிருஷி ஜாக்ரன் தொடர்ந்து விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. பத்திரிக்கைகள், செய்தி இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் விவசாயத் துறை தொடர்பான வாசகர்களையும் பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியது.
25 ஆண்டுகளை கிருஷி ஜாகரன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . கிருஷி ஜாகரன் எப்போதும் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்ற பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கும். வேளாண் பத்திரிகையின் விரிவாக்கத்திற்கான சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான யோசனைகளைத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க